Freelancer / 2022 மே 21 , பி.ப. 05:02 - 0 - {{hitsCtrl.values.hits}}

எம். இஸட். ஷாஜஹான்
நீர்கொழும்பு - பெரியமுல்ல ரயில் கடவையில் ஜீப் வண்டியொன்று ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஜீப்பில் பயணித்த 4 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று பிற்பகல் 2 .30 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில், நீர்கொழும்பு கட்டானை பிரதேசத்தைச் சேர்ந்தவர்களே காயமடைந்துள்ளனர்.
சாரதி ஆசனத்துக்கு அருகில் அமர்ந்திருந்த பெண் வாகனத்தில் சிக்குண்ட நிலையில், இவரை மீட்பதற்காக பிரதேச மக்களும் பொலிஸாரும் தீயணைப்பு படை பிரிவினரும் பெரும் பிரயத்தனப்பட்டனர்.
ஒன்றரை மணித்தியால முயற்சியின் பின்னர் குறித்த பெண் சிறிய காயங்களுடன் மீட்கப்பட்டு நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டதுடன், ஏனைய மூவரும் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக வைத்தியசாலை பொலிஸார் தெரிவித்தனர்.


4 hours ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
21 Dec 2025