Editorial / 2017 ஜூன் 19 , மு.ப. 10:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொரளைப் பகுதியில் நேற்று மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையில், 540 கிராம் ஹெரோயினுடன் 33 வயதுடைய நபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளாரென, பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த ஹெரோய்ன், 5.4 மில்லியன் ரூபாய் பெறுமதியுடையது என, பொலிஸார் தெரிவித்தனர்.
மேல் மாகாண குற்றத் தடுப்புப் பிரிவினரால், பொரளை – றனகல மாவத்தையில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில், பொரளையை வசிப்பிடமாகக் கொண்ட குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளாரென, பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபரை, மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
58 minute ago
59 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
58 minute ago
59 minute ago
1 hours ago
1 hours ago