Niroshini / 2017 ஜனவரி 30 , மு.ப. 10:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
சர்ச்சைக்குரிய தனியார் நிறுவனமொன்றுக்கு, சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட மோட்டார் வாகன உதிரிப்பாகங்கள் அடங்கிய 8 கொள்கலன்களை விடுவிக்குமாறு, நிதி அமைச்சினால், சுங்கத் திணைக்களத்துக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
“வெஹிக்கல்ஸ் லங்கா” எனும் பெயருடைய தனியார் நிறுவனத்துக்கே, இந்த மோட்டார் வாகன உதிரிப்பாகங்கள் எடுத்து வரப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
இந்த நிறுவனத்துக்கு, வாகன உதிரிப் பாகங்களை இறக்குமதி செய்வதற்கு வழங்கப்பட்டிருந்த அனுமதிப் பத்திரம், நீதிமன்றத்தினால் இரத்து செய்யப்பட்டுள்ளதாக, சுங்கத் திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த கொள்கலன்களை விடுவிக்குமாறு, திறைசேரியின் செயலாளர் ஆர்.எச்.எஸ்.சமரதுங்கவினால் தனக்கு கடிதமொன்றின் மூலம் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில், தான் சட்ட ஆலோசனை வழங்குமாறு சட்டப் பிரிவைக் கேட்டுள்ளதாகவும், சுங்கப் பணிப்பாளர் நாயகம் சூலானந்த பெரேரா தெரிவித்துள்ளார்.
18 Jan 2026
18 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 Jan 2026
18 Jan 2026