Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Princiya Dixci / 2016 நவம்பர் 24 , மு.ப. 07:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.இஸட்.ஷாஜஹான்
அமைச்சின் செயலாளர் ஒருவரின் பெயரிலும் கொழும்பிலுள்ள பிரபல விகாரையொன்றின் தேரர் ஒருவரின் பெயரிலும் பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்குச் சமமாகப் போலி ஆவணங்களையும் இலக்கத்; தகடுகளையும் தயாரித்துப் பயன்படுத்தப்பட்ட இரு வாகனங்களையும் இரண்டு துப்பாக்கிகளையும், ரவைகளையும் நீர்கொழும்புப் பிராந்தியப் பொலிஸ் பிரிவினர் கைப்பற்றியுள்ளதோடு, அந்த வாகனங்களை வைத்திருந்த சந்தேகநபரொருவரையும் கைதுசெய்துள்ளனர்.
பொலிஸாருக்குக் கிடைத்த தகவலையடுத்து மாரவில, லங்சியாகம பிரதேசத்திலுள்ள வீடொன்றைப் பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர்.
அந்த வீட்டில் சந்தேகநபரின் மனைவி இருந்துள்ளார். இந்நிலையில், வீட்டில் மறைந்திருந்த சந்தேகநபர் வீட்டின் பின்பக்கமாகவுள்ள மதில் வழியாகத் துப்பாக்கிகளை வீசிவிட்டு தப்பிச் செல்ல முயன்றுள்ளார். எனினும், வீட்டைச் சுற்றிவளைத்திருந்த பொலிஸார் சந்தேகநபரைக் கைதுசெய்ததோடு, துப்பாக்கிகளையும் கைப்பற்றியுள்ளனர்.
பின்னர், சந்தேகநபரின் வீட்டைச் சோதனையிட்ட பொலிஸார், அங்கிருந்து வெற்று ரவைகள், போலி ஆவணங்கள், ஜீப் வண்டி மற்றும் கார் ஆகியவற்றைக் கைப்பற்றியுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
42 minute ago
1 hours ago
2 hours ago