Gavitha / 2016 பெப்ரவரி 05 , மு.ப. 06:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.இஸட்.ஷாஜஹான்
நீர்கொழும்பு-சிலாபம் பகுதியில் நேற்று வியாழக்கிழமை (05) இடம்பெற்ற விபத்தில், மாணவரொருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் நான்கு மாணவர்கள் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
நீர்கொழும்பு அல் பலாஹ் முஸ்லிம் வித்தியாலத்தில் கல்வி கற்ற, தற்போது கல்விப்பொது தராதர சாதாரண தரப்பரீட்சையை எழுதிவிட்டு, பரீட்சை பெறுபேருகளுக்காக காத்திருக்கும் முஹம்மத் சிபான் என்ற 17 வயதுடைய மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
படுகாயமடைந்த ஏனைய மாணவர்கள் பிரபல பாடசாலையொன்றில் கல்வி கற்று வருகின்றனர்.
இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
குறித்த ஐந்து மாணவர்களும், வாடகை கார் ஒன்றைப் பெற்றுக்கொண்டு பயணித்துள்ளனர். இதன்போது, தளுபத்தை பிரதேசத்தில் வைத்து இவர்கள் பயணித்த கார், எதிரே வந்த மற்றொரு காருடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இதன்போது மாணவர் ஒருவர் பலியாகியுள்ளதோடு, நான்கு மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது தொடர்புடைய மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
47 minute ago
59 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
59 minute ago
1 hours ago