Editorial / 2017 நவம்பர் 22 , பி.ப. 12:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பில் அமைந்துள்ள பிரபல பாடசாலை ஒன்றில் 4ஆம் தரத்தில் கல்விப் பயின்ற மாணவன் ஒருவன் நேற்று (21) வகுப்பறையில் மயங்கி விழுந்த நிலையில்,வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நவகம்புர-இரண்டாம் பிரிவு,வெல்லம்பிட்டிய பகுதியைச் சேர்ந்த எட்மன் எரைம் என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த மாணவனுக்கு களுபோவில வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சுமார் 13 மணித்தியாலங்கள் சிகிச்சையளிக்கப்பட்ட போதும்,இன்று அதிகாலை 5 மணியளவில் உயிரிழந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் குறித்த மாணவன் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் அவரது தந்தை தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் பம்பலப்பிட்டி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
51 minute ago
6 hours ago
22 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
6 hours ago
22 Dec 2025