Editorial / 2020 பெப்ரவரி 03 , பி.ப. 02:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
துசித குமார
இலங்கையின் 72 ஆவது சுதந்திர தினத்தையொட்டி, பேருவளை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு, வீடுகளை புனமைப்பதற்காக சீமெந்து மூடைகள் வழங்கப்பட்டுள்ளன.
பேருவளை பிரதேச செயலகத்தில், இன்று (03) நடைபெற்ற இந்நிகழ்வின்போது, தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு தலா 10 சீமெந்து வீடைகள் வீதம் கையளிக்கப்பட்டுள்ளன.
மேல் மாகாண சபையின் 5 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் இவை கையளிக்கப்பட்டதாக, பேருவளை தொகுதியின் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர் சுகத் மத்துகம தெரிவித்தார்.
சீமெந்து மூடைகளை கையளிக்கும் நிகழ்வில், பேருவளை பிரதேச செயலாளர் சத்துர மல்ராஜ், அமைப்பாளர் சுகத் மத்துகம ஆகியோர் கலந்துகொண்டு, மக்களுக்கு அவற்றை வழங்கி வைத்தனர்.
3 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
9 hours ago