Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை
க. அகரன் / 2017 செப்டெம்பர் 16 , பி.ப. 12:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க.அகரன்
வவுனியா வர்த்தகர் சங்க தலைவர் ரி. கே. இராசலிங்கம் நேற்று (15) நீர் கொழும்பு நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
நிதி கைமாறல் தொடர்பில் வழக்கு விசாரணைக்கு சமூகமளிக்காது, இந்தியாவுக்குச் சென்றிருந்த இவர் கடந்த 30ஆம் திகதி இந்தியாவில் இருந்து நாடு திரும்பிய போது, கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார்.
முகவர் மூலம் மேற்குலக நாட்டுக்குச் செல்ல இருந்தவரின் நிதியை இவரின் வங்கி கணக்கில் இடுமாறு முகவர் தெரிவித்திருந்த நிலையில், வெளிநாடு செல்ல இருந்தவர் பணத்தை வைப்பிலிட்டுள்ளார்.
எனினும், முகவர் பணம் வைப்பிலிட்டவரை வெளிநாடு கூட்டிச் செல்லாமையால் பணத்தை வைப்பிலிட்ட ஆதாரங்களுடன் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதன் அடிப்படையிலேயே, வவுனியா வர்த்தக சங்க தலைவர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், நீர்கொழும்பு நீதிமன்றத்தில் வழக்கு இடம்பெற்ற நிலையில் நேற்று நிபந்தணைகளுடனான பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான வழக்கு விசாரணை, எதிர்வரும் டிசெம்பர் மாதம் ஒத்திவைக்கப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
2 hours ago
2 hours ago