Editorial / 2017 ஓகஸ்ட் 09 , மு.ப. 09:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
கம்பஹா மாவட்டத்தில் 2017ஆம் ஆண்டுக்கான வாக்காளர் தேருநர் இடாப்பில் பெயர்களைப் பதிவு செய்யத் தவறியவர்களுக்கு நாளை 10ஆம் திகதி வரை, இறுதிச் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக, கம்பஹா மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் தெரிவித்தார்.
இதன்பிரகாரம், 2017ஆம் ஆண்டு பீ.சீ. படிவத்தில் விண்ணப்பிக்கத் தவறியவர்கள், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள யூ.ஈ. படிவத்தைப் பூரணப்படுத்தி, தமது பிரிவுக்குட்பட்ட கிராம சேவகர் ஊடாக, மாவட்டத் தேர்தல்கள் அலுவலகத்துக்கு உடனடியாக அனுப்பி வைக்குமாறும் ஆணையாளர் தெரிவித்தார்.
இதேவேளை, தற்காலிகமாக தற்பொழுது வெளிநாடுகளில் வசிக்கின்ற இலங்கைக்கு திரும்ப வரவிருக்கும் இலங்கைப் பிரஜைகள், தேருநர்களாகப் பதிவுசெய்து கொள்வதற்கான தகவல்களை வழங்கும்போது, அவர்களது வெளிநாட்டு முகவரிகளையும், இலங்கைக் கடவுச் சீட்டின் இலக்கங்களையும் தவறாது கட்டாயமாகக் குறிப்பிடல் வேண்டும் என்றும் ஆணையாளர் அறிவுறுத்தினார்.
வாக்காளர் தேருநர் இடாப்பில் பெயர்களைப் பதிவு செய்யும் நடவடிக்கைகள், ஜூலை மாதம் 31ஆம் திகதியுடன் நாடளாவிய ரீதியில் நிறைவடைந்துள்ள நிலையில், எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகளுக்கான தேர்தல்களின்போது, வாக்குகளை அளிப்பதற்கு, 2017ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பதிவுகள் அவசியம் என்றும் ஆணையாளர் சுட்டிக்காட்டினார்.
5 hours ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
8 hours ago
8 hours ago