Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 05, திங்கட்கிழமை
Yuganthini / 2017 ஜூன் 15 , பி.ப. 04:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
-டீ.சங்கீதன்
கல்வி அமைச்சின் ஊடாக, பாடசாலைகளுக்கான விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர்களை உள்வாங்குவதற்கான விண்ணப்ப முடிவுத் திகதி, எதிர்வரும் 29ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளதாக, கல்வி இராஜாங்க அமைச்சர் வீ.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
“கல்வி அமைச்சின் ஊடாக, பாடசாலைகளுக்கான 3,850 விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர்களை உள்வாங்குவதற்கான நடவடிக்கைகளை, கல்வி அமைச்சு மேற்கொண்டிருந்தது. இதன்படி, தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டதோடு அதற்கான விண்ணப்பங்களை அனுப்பிவைக்கும் இறுதித் திகதி, இம்மாதம் 15 எனவும் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு தபால் ஊழியர்கள் மேற்கொண்ட தொழிற்சங்கப் போராட்டம் காரணமாகவும் அநேகரின் வேண்டுகோளுக்கு இணங்கவுமே, மேற்படி விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் திகதி நீடிக்கப்பட்டுள்ளது” என, இராஜாங்க அமைச்சர் மேலும் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago
9 hours ago