Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2022 ஓகஸ்ட் 01 , மு.ப. 11:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
(அளுத்கம துசித குமார டி சில்வா)
களுத்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாகாஸ் சந்தி புகையிரத கடவையில் கடந்த 31 ஆம் திகதி காலை வீரவில இராணுவ முகாமில் கடமையாற்றும் சிப்பாய் ஒருவர் ஓட்டிச் சென்ற வேன் ஒன்று புகையிரதத்துடன் மோதி விபத்துக்குள்ளானதாக களுத்துறை பொலிஸார் தெரிவித்தனர்.
சேவை நிலையத்தில் இருந்து காலி வீதிக்கு செல்லும் புகையிரத பாதையை கடக்கும்போது இந்த வேன் புகையிரதத்துடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன், விபத்தில் வேன் பலத்த சேதமடைந்துள்ளதாக களுத்துறை பொலிஸ் நிலைய பிரதான பரிசோதகர் தமித் ஜயதிலக்க தெரிவித்துள்ளார்.
விபத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்த இரண்டு இராணுவத்தினரும் வீரவில விமானப்படை தளத்தில் பணிபுரிபவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த விமானப்படை வீரர்களின் சடலம் பிரேத பரிசோதனைக்கு களுத்துறை நாகொட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
விபத்து தொடர்பில் களுத்துறை வடக்கு பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதி திரு.தமித் ஜயதிலக்கவின் பணிப்புரையின் பேரில் போக்குவரத்து திணைக்கள அதிகாரிகள் குழு விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago