2025 செப்டெம்பர் 14, ஞாயிற்றுக்கிழமை

விமான நிலையத்தில் பரபரப்பு: கூரையின் மீதேறியவர் சிக்கினார்

Editorial   / 2022 ஜனவரி 10 , பி.ப. 04:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

டி.கே.ஜி.கபில

போலியான கடவுச்சீட்டைப் பயன்படுத்தி அபுதாபியிலிருந்து பிரான்ஸ்க்கு செல்ல முயற்சித்தவரை பெரும்போராட்டத்துக்குப் பின்னர் கட்டுநாயக்க விமான நிலையத்தின்  அதிகாரிகள் நேற்று (10) கைது செய்துள்ள சம்பவத்தால், விமான நிலையத்தில் சிறிது நேரம் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வருகைத்தந்திருந்த இந்த நபர் போலியான கடவுச்சீட்டை பயன்படுத்தியிருப்பது தெரியவந்ததும், விமான நிலையத்திலிருந்த குடிவரவு, குடியகல்வு அதிகாரிகள் கைது செய்ய முயற்சித்துள்ளனர்.

 எனினும், அந்த நபர் விமான நிலையத்தின் கூரைமீது ஏறி தப்பியோடுவதற்கு முயற்சித்துள்ளார். இதனை தொடர்ந்து விமான நிலையத்திலிருந்த குடிவரவு, குடியகல்வு திணைக்கள அதிகாரிகள், இலங்கை விமானப் படையினர் கொமண்டோ படைப் பிரிவினர், விமான நிலையப் பொலிஸார் ஆகியோர் இணைந்து மடக்கிப்பிடித்துள்ளனர்.

இதேவேளை கைது செய்யப்பட்ட நபர் வெளிநாடுகளால் தேடப்பட்டுவந்த நபர் அல்லது ஏதாவதொரு சர்வதேச பயங்கரவாதப் பிரிவைச் சேர்ந்தவராக இருக்கலாமென விமான நிலையப் பாதுகாப்புப் பிரிவினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். மேலும் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் எந்தநாட்டைச் சேர்ந்தவர் என்பது தொடர்பில் உறுதியான தகவல்கள் இல்லை எனவும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.

நன்குப் பயிற்சி பெற்ற ஒருவரால் மாத்திரமே விமான நிலையத்தின் கூரையில் ஏறி தப்பிச் செல்ல முடியும் எனவும் தெரிவித்த அதிகாரிகளி, கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .