2025 செப்டெம்பர் 14, ஞாயிற்றுக்கிழமை

வீட்டில் தீ விபத்து: தம்பதியினர் பலி

Freelancer   / 2022 ஜூன் 26 , பி.ப. 04:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

(பிரதீப் குமார குலரத்ன)

ஹோமாகம, மாகம்மன பிரதேசத்தில் இரண்டு மாடி வீடொன்றின் தரைத்தளத்தில் உள்ள அறையொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த தாய் இன்று (26) உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேற்குறிப்பிட்ட தீ விபத்தில் தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், ஆறு வயதுடைய மகள் உட்பட மூவர் படுகாயமடைந்துள்ளதாக கஹதுடுவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 19 வயதுடைய மகள் காவிந்தி ரணசிங்கவின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தீ விபத்து ஏற்பட்ட போது இறந்தவரின் தாய் மற்றும் உறவினர்கள் வீட்டின் பக்கத்து பகுதியில் இருந்ததாகவும் அவர்களுடன் இருந்த மூத்த மகள் தலைமுடியை சீவுவதற்காக அறைக்கு வந்துள்ளார்.

இறந்தவர் தனது மனைவி, மூத்த மகள் (19) மற்றும் ஆறு வயது மகள் ஆகியோருடன் இரண்டு மாடி வீட்டின் கீழ் அறையில் தங்கியிருந்த போது இரவு 8 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது.

தீ விபத்துக்கான காரணம் சரியாக கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

பிரதேசவாசிகளால் தீ அணைக்கப்பட்டதுடன், காயமடைந்தவர்கள் ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த தீ விபத்தில் படுகாயமடைந்த 6 பேர் பொரளை சிறுவர் வைத்தியசாலையிலும், ஏனைய மூவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.47 வயதுடைய நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .