Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2017 ஜூலை 23 , பி.ப. 06:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
பீ.எம். முக்தார்
பேருவளை பிரதேச சபைக்குட்பட்ட ஹேன-கல்பொத்த வீதி, நீண்ட காலமாகப் புனரமைக்கப்படாமல், மிக மோசமான நிலையில் காட்சியளிக்கின்றது.
வீதியில் பாரிய குழிகள் ஏற்பட்டுள்ளதோடு, மழை காலங்களில் அவற்றுள் மழை நீர் தேங்கி நிற்பதால், பாதசாரிகளும் வாகன ஓட்டிகளும், பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக, பிரதேசவாசிகள் விசனம் தெரிவித்தனர்.
இந்த வீதியைப் புனரமைக்க நடவடிக்கை எடுக்குமாறு, இப்பகுதி மக்கள் பல முறை வேண்டுகோள் விடுத்த போதிலும், இதுவரை புனரமைக்கப்படவில்லையென, அவர்கள் கவலை தெரிவித்தனர்.
கடந்த காலத்தில் பேருவளைப் பகுதியில் பல வீதிகள் கார்ப்பட் முறையிலும் கொங்கிரீட் இடப்பட்டும் அபிவிருத்தி செய்யப்பட்ட போதிலும், மக்களின் அதிகளவினான பாவனையிலுள்ள இந்த வீதி புறக்கணிக்கப்பட்டமை குறித்து, பிரதேசமக்கள் பெரிதும் கவலை தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
3 hours ago
4 hours ago