2025 மே 06, செவ்வாய்க்கிழமை

ஹெரோய்ன் வைத்திருந்த பெண் உட்பட இருவர் கைது

Niroshini   / 2016 ஏப்ரல் 10 , மு.ப. 10:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாளிகாவத்தை மற்றும் கல்கிஸ்ஸை பொலிஸ் பிரிவுகளுக்குட்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது, 7 கிராமும் 170 மில்லிகிராம்  ஹெரோய்ன் போதைப் பொருள் வைத்திருந்த பெண்ணொருவர் உட்பட இருவரை, சனிக்கிழமை(09) பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

மாளிகாவத்தை, சுரங்குவத்த, பள்ளிவாசல் பகுதிக்கு அருகாமையில் வைத்து, ஹெரோய்ன் 2 கிராமும் 470 மில்லிகிராம் வைத்திருந்த சந்தேகநபரைப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

சந்தேகநபர், கொழும்பு -13 பகுதியைச் சேர்ந்த 40 வயதானவர் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை,கல்கிஸ்ஸை,படோவிட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது, ஹெரோய்ன் 4 கிராமும் 700 மில்லிகிராம் வைத்திருந்த 45 வயதான பெண் ஒருவரை  பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

குறித்தப் பெண், கல்கிஸ்ஸை பகுதியைச் சேர்ந்தவர் என விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

கைதுசெய்யப்பட்ட இருவரிடமும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X