Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
Suganthini Ratnam / 2016 ஒக்டோபர் 02 , மு.ப. 09:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் 'மனித உரிமைகள் மக்கள் பாதுகாப்பு அமைப்பினால்' மணி மகுடம் சூட்டி கௌரவிக்கப்பட்டார்.
கல்வி, சுகாதாரம், கலை, ஊடகம் மற்றும் சமூக துறைகளில் சிறந்த பங்களிப்பை வழங்கிய சமூக சேiவாயாளர்களுக்கு 'மனித உரிமைக்கான தேசமான்ய விருது' வழங்கும் நிகழ்வு சனிக்கிழமை(1.10.2016) கொழும்பில் நடைபெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கலந்துகொண்ட போதே இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் 'மனித உரிமைகள் மக்கள் பாதுகாப்பு அமைப்பின்' தலைவர் தேசமான்ய டாக்டர் மொஹமட் சரீகினால் மணி மகுடம் சூட்டப்பட்டு கௌரிவிக்கப்பட்டார்.
'கடந்த காலங்களில் அரசியல் கைதிகள் பிரச்சினை, வடகிழக்கு மீள்குடியேற்றம், மட்டு. மாவட்டத்தில் தமிழ் கிராமங்களிலுள்ள பிரச்சினைகள், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் நிழவும் கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை பிரச்சினைகள், விதைவகளது பிரச்சினைகள், காணி விடுவிப்பு, அதிகாரப் பகிர்வு போன்ற விடயங்கள் தொடர்பில் அரசியல் ரீதியாக நாட்டின் அதி உச்ச சபையான நாடாளுமன்றத்தில் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் உரையாற்றியிருந்தார்.
இவ்வாறான செயற்பாடுகளினால் தமிழ் - முஸ்லிம் மக்களது உறவில் பாரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்தும் நாடாளுமன்றத்தில் சகோதர இனமான தமிழ் மக்களது பிரச்சினைகளை அதிகாரத்தில் உள்ள ஒரு அரசியல் தலைவர் பேசுவதால் கடந்த காலங்களில் இரு சமூகங்களுக்கும் இடையில் ஏற்பட்ட கசப்புணர்வுகள் மறந்து நல்லிணக்கம் ஏற்படுவதற்கு காரணமாக அமையும். எனவே, இராஜாங்க அமைச்சர் இவ்வாறு மகுடம் சூட்டி கௌரவிக்கப்பட்டார்' என 'மனித உரிமைகள் மக்கள் பாதுகாப்பு அமைப்பின்' தலைவர் தேசகீர்த்தி டாக்டர் எம்.சரீக் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
7 hours ago
05 May 2025