2025 மே 05, திங்கட்கிழமை

ஹிக்கடுவ துப்பாக்கி பிரயோகம்: விசாரிக்க குழுக்கள் நியமனம்

Editorial   / 2017 மே 24 , பி.ப. 04:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹிக்கடுவ பிரதேச செயலக அலுவலகத்துக்கு முன்பாகவுள்ள வியாபார நிலையமொன்றில், நேற்று (24) மாலை மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகம் குறித்த விசாரணைகளுக்கு  நான்கு பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.   

மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்களால் நடத்தப்பட்ட இந்தத் துப்பாக்கிப் பிரயோகத்தில், தொடந்துவ, படுவத கல்பொத்த பிரதேசத்தைச் சேர்ந்த சஜின் நிமால் (வயது 30) மற்றும் தொடந்துவ குமாரகந்த பிரதேசத்தைச் சேர்ந்த குஷான் தனுத்தர (வயது 30) ஆகிய இருவரும் உயிரிழந்தனர்.  

சம்பவத்தில் காயமடைந்த இருவரையும் காலி, கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு கொண்டுசெல்ல முற்பட்டபோதிலும், இருவரும் வழயிலேயே உயிரிழந்துவிட்டனர் என, பொலிஸார் தெரிவித்தனர்.  

பாதாள உலகக் குழுக்களுக்கு இடையில் நீண்டகாலமாக நிலவி வந்த முரண்பாடே இந்தத் துப்பாக்கி சூட்டுச் சம்பவத்துக்குக் காரணமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.  

இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த ஸ்ரிக்கர் சஜித்திடம் இருந்து, ரி56 ரகத் துப்பாக்கியொன்று மீட்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.  

உயிரிழந்த நபர், 2015 ஆம் ஆண்டு, ஹிக்கடுவ - பிங்வத்தை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில், இதற்கு முன்னர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தார் என ஹிக்கடுவ பொலிஸார் தெரிவித்தனர்.  

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளுக்கு, சீ.சீ.டி.வியின் உதவியை நாடியுள்ளதாகவும் ஹிக்கடுவ பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X