Editorial / 2020 மே 01 , பி.ப. 07:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
என்.ஜெயரட்னம், துசித குமார
வெலிப்பென்னை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மடவல, மீகஹாதென்னை வீதியில் அமைந்துள்ள வீடொன்றிலிருந்து, ஒரு கோடி ரூபாய்க்கு பெறுமதியான ஹெரோய்ன் போதைப்பொருள், சுமார் ஐந்து இலட்சம் ரூபாய் பெறுமதியான போதை மாத்திரைகள் மற்றும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி சகிதம் சந்தேக நபர்கள் மூவரை களுத்துறை பொலிஸ் வலய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
வெலிப்பென்னை, மடவல, மீகஹாதென்னை வீதியில் அமைந்துள்ள, கொழும்பு பகுதியில் வசிக்கும் வைத்தியர் ஒருவருக்கு சொந்தமான வீடொன்றை மாதாந்தம் 8000 ரூபாய் வாடகைக்குப் பெற்று புளத்சிங்கள, மத்துகமை, அழுத்கமை, பெந்தறை, களுத்துறை, பாணந்துறை பகுதிகளுக்கு இவர்கள் போதைப்பொருட்களை மொத்த அளவில் விற்பனை செய்து வந்துள்ளனரென தெரிவிக்கப்படுகிறது.
21, 27 மற்றும் 29 வயதுகயைடைய சந்தேக நபர்கள் மூவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
43 minute ago
45 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
45 minute ago
2 hours ago