2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

யாழ். மாவட்ட புதிய அரசாங்க அதிபர் எதிர்வரும் 14ஆம் திகதி பதவியேற்பு

A.P.Mathan   / 2012 மே 10 , பி.ப. 03:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)

யாழ். மாவட்டத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் எதிர்வரும் 14ஆம் திகதி காலை 9.16 மணிக்கு தனது கடமையைப் பொறுப்பேற்கவுள்ளதாக யாழ். மாவட்ட செயலகம் அறிவித்துள்ளது.

யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் - ஜனாதிபதி செயலகத்திற்கு இடமாற்றப்பட்டதையடுத்து இவரின் இடத்திற்கு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் நியமிக்கப்பட்டுள்ளார்.

யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமாருக்கு பொதுநிர்வாக அமைச்சு குறித்த இடமாற்ற உத்தரவை தொலைநகல் மூலம் திருமதி இமெல்டா சுகுமாருக்கு உத்தியோக பூர்வமாக வழங்கியுள்ளது.

யாழில் அரசாங்க அதிபராக இருந்த திருமதி இமெல்டா சுகுமார் கடந்த 2011 ஜூலையிலிருந்து யாழ். மாவட்ட அரசாங்க அதிபராகக் கடமையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .