2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

சிறுவர்களுக்கு சிகரெட் விற்பனை செய்த வர்த்தகர்களுக்கு ரூ.75,000 அபராதம் விதிப்பு

Menaka Mookandi   / 2012 ஓகஸ்ட் 27 , பி.ப. 02:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரஜனி)

21 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு சிகரெட் மற்றும் பீடி விற்பனை செய்த வர்த்தகர்களுக்கு 75 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்க நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளதாக யாழ். மதுவரி நிலைய பொறுப்பதிகாரி என்.கிருபாகரன் தெரிவித்தார்.

யாழ். மற்றும் பிறநகர் பகுதி வர்த்தக நிலையங்களில் யாழ். மதுவரி நிலைய பரிசோதகர்களினால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போது 25 வர்த்தகர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இன்று யாழ். நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

மேற்படி 25 வர்த்தகர்களிடமிருந்தும் தலா மூவாயிரம் ரூபா வீதம் தண்டப்பணம்  அறவிடப்பட்டதுடன் கடுமையாக எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X