Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Super User / 2011 டிசெம்பர் 02 , மு.ப. 09:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ். மாவட்டத்தில் சமூக அபிவிருத்தி திட்டத்தின் ஊடாக வாழ்வாதாரத்தை கட்டியெழுப்புவதற்காக 11 மில்லியன் ரூபா நிதியினை ஜப்பானிய அரசாங்கம் வழங்கியுள்ளதாக இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் நொபுஹிடோ ஹெபோ இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
இத்திட்டத்தின் ஊடாக யுத்ததினால் பாதிக்கப்பட்ட தெல்லிப்பளை பிரதேச செயலகத்திற்குட்பட்ட மூன்று கிராமங்களில் மீள்குடியேற்றப்பட்ட மக்களின் மீன்பிடி, விவசாயம் உள்ளடங்களான வாழ்வதாரத்தை கட்டியெழுப்பப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
யாழ்ப்பாணத்தில் 'ஜெய்கா'வினால் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி திட்டத்தின் அடிப்படையாகவே இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தூதுவர் தெரிவித்தார்.
இந்த திட்டத்தின் ஊடாக சுமார் 300 குடும்பங்கள் நன்மையடையும் என எதிர்பார்ப்பதாக அவர் மேலும் தெரிவித்தார். இந்த திட்டம் யாழ். சமூக செயற்பாட்டு மையத்தின் ஊடாக நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இது தொடர்பில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை கொழும்பிலுள்ள ஜப்பானிய தூதுவரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இடம்பெற்றது.
ஜப்பானிய அரசு சார்பாக தூதுவர் நொபுஹிடோ ஹெபோ மற்றும் யாழ். சமூக செயற்பாட்டு மையத்தின் சார்பாக இணைப்பாளர் என்.சுஹிர்தராஜ் ஆகியோர் கையொழுத்திட்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
9 hours ago
9 hours ago