Suganthini Ratnam / 2010 டிசெம்பர் 28 , மு.ப. 06:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
தாவடியைச் சேர்ந்த மங்கள இசை வாத்தியக் கலைஞர்கள் 12 பேருக்கு ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா நிதியுதவி வழங்கியுள்ளார்.
தாவடியைச் சேர்ந்த தவில் மற்றும் நாதஸ்வர கலைஞர்களுக்கே இந்நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. இக்கலைஞர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 10 ஆயிரம் ரூபாய் காசோலைகள் அமைச்சரின் யாழ். அலுவலகத்தில் வைத்து நேற்று திங்கட்கிழமை வழங்கப்பட்டன.
இம்மாதம் 24ஆம் 25ஆம் 26ஆம் திகதிகளில் தாவடியில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் பேரவை நடத்திய எம்.ஜி.ஆரின் 23ஆம் ஆண்டு நிறைவையிட்டு இக்கலைஞர்கள், மங்கள இசை வழங்கியிருந்தனர்.
இக்கலைஞர்களுக்கான காசோலைகளை ஈ.பி.டி.பி. நாடாளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்த்திரி அலென்டின் உதயன், யாழ் மாநகரசபை முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா, ஈ.பி.டி.பி.யின் யாழ். மாவட்ட அமைப்பாளர் கந்தசாமி கமலேந்திரன் கமல் மற்றும் அனைத்துலக எம்.ஜி.ஆர் பேரவைத் தலைவர் விஜயகாந் ஆகியோர் அமைச்சர் முன்னிலையில் வழங்கினர்.
மகேஸ்வரி நிதியத்திலிருந்து இந்நிதி வழங்கப்படுவதுடன், கலை மென்மேலும் வளர வாழ்த்துவதாகவும் அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.
.jpg)
3 hours ago
9 hours ago
22 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
9 hours ago
22 Dec 2025