2025 மே 20, செவ்வாய்க்கிழமை

கோப்பாய் அரச காணிகளில் வசிக்கும் 286 குடும்பங்களுக்கு உரிமம் வழங்க நடவடிக்கை

Menaka Mookandi   / 2012 செப்டெம்பர் 07 , மு.ப. 06:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.கே.பிரசாத்)

கோப்பாய் பிரதேச செயலகத்திற்குட்டபட்ட பகுதிகளில் அரச காணியில் வசித்து வருகின்ற 286 குடும்பங்களுக்கு காணி உரிமப் பத்திரம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நேற்று வியாழக்கிழமை கோப்பாய் பிரதேச செயலகத்தில் நடைபெற்ற பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் இந்த 286 குடும்பங்களுக்கும் காணி உரிமைப் பத்திரம் வழங்குவதற்கு அனுமதிபெறப்பட்டுள்ளதையடுத்து விரைவில் அவர்களுக்குரிய காணி உரிமப்பத்திரம் வழங்குவதற்கு பிரதேச செயலகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

ஜே/275 கிராம அலுவலர் பிரிவில் 30 குடும்பங்களுக்கும், ஜே/273 கிராம அலுவலர் பிரிவில் 24 குடும்பங்களும், ஜே/267 கிராம அலுவலர் பிரிவில் 40 குடும்பங்களும், ஜே/272 கிராம அலுவலர் பிரிவில் 11 குடும்பங்களும், ஜே/287 கிராம அலுவலர் பிரிவில் 148 குடும்பங்களும் ஜே/265 கிராம அலுவலர் பிரிவில் 33 குடும்பங்களும் அரச காணிகளில்  வசித்து வருகின்றனர்.

குறித்த பகுதியில் வசிக்கின்ற மக்களின் காணிகள் நிளஅளவை மேற்கொள்ளப்பட்ட பின்னர் காணி ஆணையாளர் நாயகத்தின் அனுமதிக்காக அனுப்பி வைக்கப்படவுள்ளன. காணி ஆணையாளரின் அனுமதி கிடைத்தவுடன் அவர்களுக்கான காணி உரிமங்கள் வழங்கப்படும் என்று கோப்பாய் பிரதேச செயலக திட்டமிடல் பணிப்பாளர் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X