2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

யு.என்.டி.பி நிதியுதவியில் வசந்தபுரத்தில் நிர்மாணிக்கப்பட்ட 50 வீடுகள் கையளிப்பு

Menaka Mookandi   / 2012 ஏப்ரல் 25 , பி.ப. 12:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.கே.பிரசாத்)

நோர்வே யு.என்.டி.பி நிறுவனத்தின் நிதி உதவியின் கீழ், வலிகாமம் வடக்கு, வசந்தபுரம் பகுதியில் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட மக்களுக்காக அமைக்கப்பட்ட 50 வீடுகளும் இன்று பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யாழ். மாவட்ட அரச அதிபர் இமெல்டா சுகுமார் மற்றும் நோர்வே தூதரக அதிகாரிகள், யு.என்.டி.பி நிறுவன பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஓவ்வொரு வீடும் தலா ஏழு இலட்சம் ரூபா பெறுமதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ளதோடு இந்த 50 வீட்டுத்திட்டத்துடன் இணைந்தவாறு சிறுவர் பாடசாலை, கூட்டுறவுச் சங்கம், மற்றும் அரைக்கும் ஆலை என்பனவும் அமைக்கப்பட்டுள்ளன.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .