2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

வடமாகாண சாலைகளுக்கு தலா 10 பேருந்துகள்

Kogilavani   / 2014 ஒக்டோபர் 07 , மு.ப. 06:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-யோ.வித்தியா

இலங்கை போக்குவரத்து சபையின் வடமாகாணத்திலுள்ள 7 சாலைகளுக்கும் தலா 10 பேருந்துகள் வழங்கப்படவுள்ளதாக வடமாகாண பிரதான பிராந்திய முகாமையாளர் எஸ்.ஏ.அஸார் செவ்வாய்கிழமை (07) தெரிவித்தார்.

மேற்படி பேருந்துகள் எதிர்வரும் 13 ஆம் திகதி யாழ்ப்பாணததுக்கு விஜயம் மேற்கொள்ளும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினால் வழங்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

வழங்குவதற்குரிய 56 பேருந்துகள் யாழ்ப்பாணத்துக்கு கொண்டுவரப்பட்டு, தற்போது கோண்டாவில் சாலையில் தரித்து வைக்கப்பட்டுள்ளன.

மிகுதி 14 பேருந்துகளும் நாளை புதன்கிழமை (08) யாழ்ப்பாணத்துக்கு வந்தடையும் என அவர் மேலும் தெரிவித்தார்.

கோண்டாவில், பருத்தித்துறை, காரைநகர், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியா ஆகிய 7 சாலைகளுக்குமே இந்த பேருந்துகள் வழங்கப்படவுள்ளன.

இந்த பேருந்துகள் கிடைப்பதன் மூலம் முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்ட சாலைகளுக்கு நிலவும் பேருந்து தட்டுப்பாடு ஓரளவு குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .