2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

மனைவியை படுகொலை செய்தவருக்கு 12 வருட கடூழிய சிறைத் தண்டனை

Super User   / 2012 ஜனவரி 17 , பி.ப. 01:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

கடந்த 2007 ஆம் ஆண்டு யாழ்.கரவெட்டிப் பகுதியில் தனது மனைவியை கூரிய ஆயுதத்தினால் படுகொலை செய்தவருக்கு யாழ். மேல் நீதிமன்றம் 12 வருட கடூழிய சிறைத் தண்டனை விதித்து இன்று செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்துள்ளது

தனது மனைவியை கூரிய ஆயுதத்தினால் படுகொலை செய்துள்ளார் என கந்தையா கருணாகரன் மீது வழக்குத் தொடரப்பட்டு 5 வருடங்களாக விசாரிக்கப்பட்டது.

இதனையடுத்து இன்று செவ்வாய்க்கிழமை யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி சுப்பரமணியம் பரமராஜாவினால் குற்றவாளியாக இனங்காணப்பட்டவருக்கு 12 வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதுடன் 5,000 ரூபா தண்டமாக செலுத்துமாறும் உத்தரவிட்டப்பட்டது.

தண்டப்பணம் 5,000 செலுத்த தவறின் மேலதிகமாக ஆறு மாத சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X