Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Kogilavani / 2011 டிசெம்பர் 24 , மு.ப. 10:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ்.பொலிஸ் நிலையத்தின் தலைமைப் பொறுப்பதிகாரி சமன் சிகேராவின் மேற்பார்வையின் கீழ் பல்வேறு விதமான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இந்தவருடத்தில ஜனவரி முதல் டிசம்பர் வரை 16,386 பொதுமக்கள் சார்ந்த முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டு தீர்வு காணப்பட்டுள்ளதாகவும் யாழ்.பொலிஸ் நிலையம் அறிவித்துள்ளது.
யாழ்.பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் பரிசோதகர் பிரேம ரட்ணவின் நெறிப்படுத்தலில் மக்களுடைய முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டு அதற்கு துரிதமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தால் மற்றும் சமரச முயற்சியின் மூலம் மக்களுக்கு தீர்வு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது
இதேவேளை, யாழ்.பொலிஸ் நிலையத்தினால் தனது கட்டுப்பாட்டுக்குள் உள்ள பிரதேச மக்களின் முறைப்பாடுகள் ஏற்றுக் கொள்ளப்பட்டு தீர்வுகாணப்படுகிறது எனவும் ஏனைய பிரதேச மக்கள் தங்கள் முறைப்பாடுகளை தத்தமது பிரதேச பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யுமாறும் யாழ்.பொலிஸ் நிலையத்திற்கு வருகை தந்து பதிவு செய்ய வேண்டாம் எனவும் யாழ்.பொலிஸ் நிலையம் பொதுமக்களுக்கு தெரிவித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
17 May 2025
17 May 2025