2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

இலங்கையிலுள்ள பத்திரிகைகளுக்கு எதிராக 1653 முறைப்பாடுகள்: சுகுமார் றொக்வூட்

Thipaan   / 2014 டிசெம்பர் 06 , மு.ப. 10:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

- பொ.சோபிகா

இலங்கையிலிருந்து வெளிவருகின்ற பத்திரிகைகளுக்கு எதிராக கடந்த 2003ஆம் ஆண்டில் இருந்து 2014ஆம் ஆண்டு வரை 1653 முறைப்பாடுகள், இலங்கை பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் பிரதம நிறைவேற்று அதிகாரி சுகுமார் றொக்வூட், வெள்ளிக்கிழமை (05) தெரிவித்தார்.

இலங்கை பத்திரிகை ஸ்தாபனம், இலங்கை பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழு ஆகியவற்றின் ஏற்பாட்டில் பத்திரிகைகளின் செயற்பாடுகள் மற்றும் தகவல் பெறும் உரிமை தொடர்பில் யாழிலுள்ள விருந்தினர் விடுதியில் வெள்ளிக்கிழமை (05) நடத்திய பத்திரிகையாளர் கருத்தாடல் நிகழ்வில் கலந்துகொண்டு கூறுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

றொக்வூட் தொடர்ந்து கருத்துக்கூறுகையிலேயே மேற்படி விடயத்தை தெரிவித்தார்.

இதில், பத்திரிகைகளின் செயற்பாடுகள் மற்றும் தகவல் பெறும் உரிமை தொடர்பாக இலங்கை பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழுவின் தமிழ் ஊடகப்பிரிவு, முறைப்பாட்டு பொறுப்பதிகாரி அமீன் குசைன் விளக்கமளிக்கையில்,

பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழு ஊடகத்துறைக்கு ஒரு பாதுகாப்பாக இருக்கின்றது. ஊடகங்களை பொறுப்புள்ளதாக்குவதும் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்ப்படுத்துவதும் இதன் நோக்கமாகும். ஒவ்வொரு பத்திரிகை அலுவலகத்திலும் பத்திரிகை முறைப்பாட்டு அலுவலகம் இருக்க வேண்டும்.

எந்த ஒரு விடயத்தையும் சரியானதா என்று உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். பிழையான தகவல்கள், நம்பிக்கை இல்லாத தகவல்களையும் கொடுப்பதால் சில ஊடக செயற்பாட்டில் பொதுமக்களுக்கு நம்பிக்கையில்லாமல் இருக்கின்றது.

அச்சு ஊடகம் மட்டும் எமது வரையரைக்குட்பட்டதாக இருப்பதால் பத்திரிகையிலுள்ள குறைபாடுகளை தெரிவித்து அறிவூட்டுகின்றோம். ஆனால் இணையத்தளங்களை கட்டுப்படுத்த முடியாது. இருப்பினும் சரியான முறையில் செய்திகளை வெளியிடுதல் ஊடகத்துறைக்கு நல்ல வரவேற்பை ஏற்ப்படுத்தும்.

2009ஆம் ஆண்டு நடைபெற்ற கலந்துரையாடலில் இணையம் தொடர்பான ஒழுக்கக் கோவையை பின்பற்றி பிரதான இணையத்தளங்கள் இயங்குவதாக தெரிவித்திருந்தனர்.

ஆனால், அங்கீகரிக்கப்படாத சில இணையத்தளங்கள் அரசாங்கத்துக்கு எதிரான செய்திகளை பிரசுரிக்கும் போது அவை அரசால் இடைநிறுத்தப்படுகின்றன.

அத்துடன் தகவல் அறியும் உரிமைச்சட்டம் இலங்கையில் இல்லை. இதன் காரணமாக தகவல்களை சரியான முறையில் பொதுமக்களுக்கு கொடுப்பதில் ஊடகங்கள் பெரும் சவாலை எதிர்நோக்குகின்றன. இதனால் பொய்களும் உண்மையாக்கப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்படுகின்றது.
தகவல் அறியும் உரிமைச்சட்டம் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் என்ற காரணத்தை காட்டி எமது நாட்டில் அங்கீகரிக்கப்படவில்லை.

மக்களுக்கு தகவல்களை அதிகாரிகள் தெரியப்படுத்தாமல் இருப்பதற்கு காரணம் அரசாங்கத்துக்கு இதனால் பாதிப்பு ஏற்படலாம் என்பதுடன், தமக்கும் பாதிப்புக்கள் ஏற்பட்டு விடலாம் என்ற காரணங்களுக்காக அதிகாரிகள் பின்நிற்கின்றனர்.

ஜனாதிபதியிடம் இச்சட்டம் தொடர்பாக வேண்டுகோள்விடுத்திருக்கின்றோம். அது அங்கிகரிக்கப்பட்டால் ஊடகத்துறைக்கு பலம் கூடுதலாக இருக்கும்.

தகவலை அறியும் உரிமை சட்ட ரீதியாக வரும் போது இலகுவான முறையில் தகவல்களை பெற்றுக்கொள்ளலாம். அத்துடன் நல்ல சமூக மாற்றத்தையும் கொண்டுவரவும் முடியும் என தெரிவித்தார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .