2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

யாழில் மழை; மேலும் 200பேர் பாதிப்பு

Menaka Mookandi   / 2014 ஒக்டோபர் 21 , மு.ப. 05:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

யாழ்ப்பாணத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் யாழ்.மாநகர சபை எல்லைக்குட்பட்ட நாவாந்துறை, பொம்மவெளி பகுதியில் வசிக்கும் மேலும் 200 குடும்பங்கள் பாதிப்படைந்துள்ளதாக யாழ்.மாவட்ட செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் இன்று செவ்வாய்க்கிழமை (21) தெரிவித்தார்.

ஏற்கனவே 100 குடும்பங்கள் வரையில் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் மேலும் 200 குடும்பங்கள் தற்போது பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வீடுகளுக்குள் காணப்படும் வெள்ளநீரை பாரிய இயந்திரங்கள் மூலம் வெளியேற்ற முடியாதுள்ளது. பாரிய இயந்திரங்களை அப்பகுதிக்கு கொண்டு செல்ல முடியாதவாறு வெள்ளம் காணப்படுகின்றது.

இதனால் மனித வலுவை பயன்படுத்தி வெளியேற்றும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம் என அவர் கூறினார்.

அத்துடன், அம்மக்களின் உடனடி தேவையான உலர் உணவு நிவாரணங்களை  வழங்குவதற்கான நடவடிக்கைகள் இன்று செவ்வாய்க்கிழமை (21) முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .