2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

கசிப்பு வைத்திருந்த இருவருக்கு 20,000 ரூபா அபராதம்

Kogilavani   / 2014 ஜனவரி 24 , மு.ப. 04:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி பகுதியில் சட்ட விரோதமாக மதுபானம் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதான இருவருக்கு 20,000 ரூபா தண்டப்பணமும் மற்றுமொருவருக்கு 30,000 ரூபாய்  சரீர பிணையில்  செல்லவும் கிளிநொச்சி மாவட்ட நீதிவான் எம்.ஐ.வகாப்தீன் வியாழக்கிழமை (22) உத்தரவிட்டார்.

கிளிநொச்சி, பளைப்பகுதியில் 425 மில்லிலீற்றர் கசிப்பு வைத்திருந்த குற்றச்சாட்டில் கடந்த 17 ஆம் திகதி கைதான வயோதிபருக்கு 5000 ஆயிரம் ரூபா தண்டப்பணமும் கிளிநொச்சிப் பகுதியில் ஒரு போத்தல் கசிப்பு வைத்திருந்த குற்றச்சாட்டில் கடந்த 19 ஆம் திகதி கைதான நபருக்கு 15000 ஆயிரம் ரூபா  தண்டப்பணமும் செலுத்துமாறு நீதவான் உத்தரவிட்டார்.

இதேவேளை, கிளிநொச்சி பகுதியில் இரண்டு போத்தல் கசிப்பு வைத்திருந்தவருக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்ட போது, குறித்த நபர் தான் சுற்றவாளி என மன்றில் தெரிவித்தார். இதனால் மேற்படி நபரை பூர்வாங்க விசாரணைக்கு உட்படுத்துவதற்காக இந்த வழக்கினை எதிர்வரும் பங்குனி மாதம் 2 ஆம் திகதி ஒத்தி வைத்ததுடன், குறித்த சந்தேகநபரை 30000 ஆயிரம் ரூபா சரீர பிணையில் செல்வதற்கும் நீதவான் உத்தரவிட்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .