2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

சரஸ்வதி சனசமூக நிலையத்தால் 26 அங்கத்தவர்களுக்கு வீடுகள்

Suganthini Ratnam   / 2014 மார்ச் 04 , மு.ப. 05:14 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வி.தபேந்திரன்


மிகவும் வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள தனது 26 அங்கத்தவர்களுக்கு யாழ். கைதடி மேற்கு சரஸ்வதி சனசமூக நிலையம் வீடுகளை கட்டுவதாக அச்சனசமூக நிலையத்தின் தலைவர் ப.செல்லத்துரை தெரிவித்தார்.

ஒவ்வொரு வீடும்   485,000 ரூபா பெறுமதியில் கட்டப்படுவதாகவும் அவர் கூறினார்.  இந்நிலையில், 2013ஆம் ஆண்டு  நவம்பர் மாதம் இதற்கான பணி ஆரம்பிக்கப்பட்டு,  04 வீடுகள் கட்டிமுடிக்கப்பட்டன.  இவ்வீடுகளை எதிர்வரும் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள சனசமூக நிலையத்தின்; 57ஆவது ஆண்டு விழாவில் பயனாளிகளிடம் கையளிக்கப்படும்.  ஏனைய  வீடுகளையும்  படிப்படியாக கட்டி பயனாளிகளிடம் கையளிக்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.

இச்சனசமூக நிலையத்தின் புலம்பெயர் அங்கத்தவர்கள் தங்களது உயிரிழந்த உறவுகளின் நினைவாக வழங்கிய நிதியுதவியிலும்  இலங்கையிலுள்ள ஏனைய அங்கத்தவர்களின் நிதியுதவியிலும் இவ்வீடுகள் கட்டப்படுகின்றன.  வீடுகளை கட்டுவதற்கான மூலப்பொருட்களை சனசமூக நிலையம் வழங்குவதுடன், இதற்கான மனித உழைப்பை பயனாளிகள் மேற்கொள்வதாகவும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .