2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

அருட்தந்தை பி.பி.பிலிப் அடிகளாரின் 50 ஆவது குருத்துவ நிறைவு விழா

Kogilavani   / 2012 மே 03 , மு.ப. 05:57 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கவிசுகி)


அமலமரித் தியாகிகள் சபைக் குரு பி.பி.பிலிப் அடிகளாரின்  50 ஆவது குருத்துவ நிறைவு விழா நேற்று நடைபெற்றது.

பாசையூர் புனித அந்தோனியார் ஆலயத்தில் விசேட திருப்பலியுடன் குருத்துவ நிறைவுவிழா ஆரம்பமானது. மன்னார் ஆயர் அதிவணக்கத்திற்குரிய இராயப்பு யோசெப் ஆண்டகை, பாகிஸ்தான் ஆயர் அதிவணக்கத்திற்குரிய விக்ரர் ஞானப்பிரகாசம், அமலமரித் தியாகிகள் சபையின் வடமாகாண குரு முதல்வர் போல் நட்சத்திரம், யாழ்.மறைமாவட்ட குரு முதல்வர் யஸ்ரின் ஞானப்பிரகாசம், ஆகியோர் இணைந்து கூட்டுதிருப்பலி ஒப்புக்கொடுத்தனர்.

அருட்தந்தையின் பணிகள் உள்ளடக்கிய அன்பன் என்னும் நூல் ஒன்றும் இதன்போது வெளியிட்டு வைக்கப்பட்டதுடன் பங்கு மாணவர்களின் கலை நிகழ்வும் இதன்போது இடம்பெற்றன.

இந்நிகழ்விற்கு யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார், அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், பங்குமக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .