2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

கடல்வாழ் உயிரின வளர்ப்புக்காக 50 குடும்பங்கள் தெரிவு

Gavitha   / 2014 டிசெம்பர் 03 , மு.ப. 09:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-யோ.வித்தியா

கடல்வாழ் உயிரின வளர்ப்புக்காக கிளிநொச்சியில் 50 குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் கடனடிப்படையில் மானியம் வழங்கப்படவுள்ளதாக, மாவட்ட நீர்வாழ் உயிரின வளர்ப்பு விரிவாக்கல் அதிகாரி எஸ்.சலீபன் புதன்;கிழமை (03) தெரிவித்தார்.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் வாழ்வின் எழுச்சி திட்டத்தின், திவிநெகும திட்டத்தின் கீழ் 01 ஆம் கட்டமாக 50 பயனாளிகள் தற்போது தெரிவு செய்யப்பட்டு, அவர்களுக்கு நங்கூரங்கள், மூங்கில் கூடுகள், வலைகள் போன்ற உபகரணங்கள் அடுத்த வாரம் முதல் வழங்கப்படவுள்ளன.

அத்துடன், பாசி வளர்ப்புக்காக ஹேலீஸ் நிறுவனத்தால் கடனடிப்படையில் 13 ஆயிரத்து 500 ரூபாய் பெறுமதியான பாசியும் வழங்கப்படவுள்ளதுடன், அந்தக்கடனை பெறுபவர்கள் பாசிகளின், அறுவடையின் போது அதனை மீளச்செலுத்தவேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
 



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .