2025 செப்டெம்பர் 27, சனிக்கிழமை

பொதுச் சந்தை நிர்மாணத்திற்கு 57 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

Super User   / 2013 டிசெம்பர் 09 , மு.ப. 10:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகரத்தினம் கனகராஜ்

யாழ். நெல்லியடி பொதுச் சந்தையும் அதனை அண்டிய கடைத் தொகுதியும் 57 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என வடமராட்சி தென் மேற்கு பிரதேச சபை தலைவர் பொ.வியாகேசு தெரிவித்துள்ளார்.

புறநெகும திட்டத்தின் கீழ் இந்த சந்தை நிர்மாணிக்கப்படவுள்ளது என அவர் குறிப்பிட்டார்.அத்துடன் பிரதேச சபையின் 2014ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டம் ஏகமனதாக சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

இந்த வரவு செலவுத்திட்டம் எதிர்வரும் 18ஆம் திகதி முதல் வடமராட்சி தென் மேற்கு பிரதேச சபையின் தலைமை அலுவலகத்தில் மக்கள் பார்வைக்கு வைக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .