2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

யாழ். சிறுமிகள் துஷ்பிரயோகம்; 7 கடற்படை வீரர்களுக்கு விளக்கமறியல்

Menaka Mookandi   / 2014 ஜூலை 18 , மு.ப. 11:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம், காரைநகர், ஊரி கிராமத்தில் இரண்டு சிறுமிகளை வல்லுறவுக்கு உட்படுத்தினார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட கடற்படை வீரர்கள் ஏழு பேரையும் எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். சிறுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த கிராமத்தைச் சேர்ந்த 11 வயது மற்றும் 9 வயது சிறுமிகளே இவ்வாறு வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

வல்லுறவு மேற்கொண்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கடற்படை வீரர்கள் கைது செய்யப்பட்டு இன்று மாலை அடையாள அணிவகுப்பில் நிறுத்தப்பட்டனர்.

இந்நிலையில், இவர்களை எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். சிறுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காரைநகர் பிரதேசத்தைச் சேர்ந்த 11 வயது சிறுமி ஒருவர் பாடசாலைக்குச் சென்ற போது, அவரைத் தடுத்து வைத்து தொடர்ச்சியாக பதினொரு நாட்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியிருப்பதாக கடற்படை வீரர்களுக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சம்பவத்தை கண்டித்து யாழ்ப்பாணத்தில் இன்று ஆர்ப்பாட்டமொன்றும் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0

  • M.A.a.Rasheed Friday, 18 July 2014 02:14 PM

    சரியான நீதி கிடைக்க வேண்டும். கிடைக்குமா? கிடைக்கும், ஆனால் கிடைக்காது...!!!

    Reply : 0       0

    pravin Saturday, 19 July 2014 05:40 AM

    singalargal idu pondar illivu seayalgalile idupaduvadu ilangai arrasin addravodu dana?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .