2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

கள்ளு வைத்திருந்த 10 பேருக்கு தண்டம்

George   / 2014 ஓகஸ்ட் 19 , மு.ப. 07:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

- சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சிப் பகுதியில், அனுமதிக்கப்பட்ட கள்ளின் அளவுக்கு (1 ½ போத்தல்) மேலதிகமாக கள்ளை வைத்திருந்த 10 பேருக்குத் தலா 1000 ரூபா வீதம் தண்டம் விதித்து கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.ஐ.வகாப்தீன் செவ்வாய்க்கிழமை (19) தீர்ப்பளித்தார்.

கிளிநொச்சி மதுவரித் திணைக்கள அதிகாரிகளால், இம்மாதம் ஆரம்பப் பகுதியில் கிளிநொச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மேற்படி 10 பேரும் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் அனைவருக்கும் எதிராக கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் மதுவரித் திணைக்களத்தினர் வழக்குத் தாக்கல் செய்தனர்.

மேற்படி வழக்கு செவ்வாய்க்கிழமை (19) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே நீதவான் மேற்கண்டவாறு தீர்ப்பளித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .