2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 1080 பேருக்கு உடனடி உணவுகள் வழங்கப்பட்டன

Thipaan   / 2014 நவம்பர் 29 , மு.ப. 07:40 - 0     - {{hitsCtrl.values.hits}}


- யோ.வித்தியா


வலி. வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து மதவடி கண்ணகி முகாம், சபாபதிபிள்ளை முகாம் போன்ற நலன்புரி முகாம்களில் தங்கி வாழும் 1080 பேருக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளரும் மற்றும் வடமாகாண சபை உறுப்பினருமாகிய அங்கஜன் இராமநாதனால் மதிய உணவு மற்றும் இரவு உணவுகள் வெள்ளிக்கிழமை (28) வழங்கப்பட்டன.

மேற்படி நலன்புரி முகாம்களில் வசிக்கும் மக்களின் வீடுகளை சூழ வெள்ளம் காணப்படுவதால் வீடுகளுக்குள்ளும் வெள்ள நீர் ஊறியுள்ளது.

இதனால், இம்மக்கள் தங்களுக்கு தேவையான உணவுகளை சமைத்து உண்ண முடியாத நிலையில் இருந்தனர்.

இதனையடுத்து, அங்கஜனால் மதிய மற்றும் இரவு உணவுகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .