2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

'யுத்தத்தால் கிளிநொச்சியில் 1.673 பெண்கள் விதவைகளாகினர்'

Menaka Mookandi   / 2014 டிசெம்பர் 12 , மு.ப. 11:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி மாவட்டத்தில் யுத்தத்தால் கணவனை இழந்த 1,673 பெண்களும், கணவனால் கைவிடப்பட்ட நிலையில் 1,888 பெண்களும் வசித்து வருவதாக கிளிநொச்சி மாவட்ட சமூக சேவைகள் திணைக்களத்தின் புள்ளிவிபரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

யுத்தத்தில் கணவனை இழந்தவர்களில் கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் 924 பேரும், பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவில் 179 பேரும், பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில் 238 பேரும், கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் 332 பேரும் வசிக்கின்றனர்.

கணவனால் கைவிடப்பட்ட நிலையில், கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் 670 பேரும், பூநகரி  பிரதேச செயலாளர் பிரிவில் 875 பேரும், கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் 247 பேரும், பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவில் 96 பேரும் வசிக்கின்றனர். இதனைவிட விபத்துக்கள், இயற்கை மரணங்கள் ஆகியவற்றால் கணவனை இழந்த நிலையில் 4 ஆயிரத்து 561 பெண்கள் வசிக்கின்றனர்.

கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள இந்த 8 ஆயிரத்து 122 பெண் தலைமைத்துவ குடும்பங்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்தும் வகையில், சமூக சேவை அமைச்சால் சுயதொழில் உதவிகள், வாழ்க்கைப்படி என்பன மேற்கொள்ளப்படும் அதேவேளை, வீட்டுத்திட்டங்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் உதவிகள் என்பன வழங்கப்பட்டு வருகின்றன என அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .