2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

காங்கேசன்துறை துறைமுகம் 2014 இல் செயற்படும்: இந்திய துணை உயர் ஸ்தானிகர்

Super User   / 2012 ஒக்டோபர் 17 , பி.ப. 01:06 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.கே.பிரசாத்)


இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் புனரமைப்பு செய்யப்பட்டு வரும் காங்கேசன்துறை துறைமுகம் 2014ஆம் ஆண்டு நடுப்பகுதியில் செயற்படும் என யாழ். இந்திய துணை உயர் ஸ்தானிகர் எஸ்.மகாலிங்கம் தெரிவித்தார்.

யாழ். வணிகர் கழகத்தில் நடைபெற்ற சர்வதேச வர்த்தக கண்காட்சி தொடர்பான கலந்துரையாடலின் போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

"காங்கேசன்துறை துறைமுக புனரமைப்பு பணிகள் ஆறு கட்டங்களாக  முன்னெடுக்கப்பட்டு வருகின்றன . இதுவரை மூன்று கட்ட வேலைகள் நிறைவு பெற்றுள்ளன. துறைமுக பகுதியில் மூழ்கியிருந்த கப்பல்களில் 10 கப்பல்கள் இதுவரை மீட்டெடுக்கப்பட்டுள்ளன.

அத்துடன் காங்கேசன்துறை துறைமுக பகுதியை ஆழமாக்கும் நடவடிக்கையும் ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்த பணியை இந்திய நிறுவனமொன்றினால் மேற்கொள்ளப்படவுள்ளது  இதற்கான ஒப்பந்தங்கள் விரைவில் இலங்கை மற்றும் இந்திய அரசாங்கங்களுக்கு இடையில் மேற்கொள்ளப்படவுள்ளது. இந்த வேலைத்திட்டங்கள் யாவும் நிறைவுபெற்றவுடன் துறைமுகம் செயற்படும்" என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X