2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

விடையளித்துவிட்டு திரும்பிய 3 மாணவர்கள் வீதி விபத்தில் படுகாயம்

Menaka Mookandi   / 2013 டிசெம்பர் 20 , மு.ப. 11:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா, எஸ்.கே.பிராசத்

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை எழுதி விட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த பாடசாலை மாணவிகள் மூவர் விபத்துக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவமொன்று யாழ்ப்பாணத்தில் இன்று (20) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

மருதனார்மடம் இராமநாதன் கல்லூரி மாணவிகளான சிவானந்தராசா சர்மினா (வயது 16), இராமச்சந்திரன் லக்சனா (வயது 17), செந்தூர்செல்வன் றொபினா (வயது 16) ஆகிய மூவருமே இவ்வாறு காயமடைந்தவர்களாவர்.

குறித்த மாணவிகள் மருதனார்மடம் மானிப்பாய் வீதியில் பயணித்துக் கொண்டிருந்த வேளையில் எதிரே வந்த சிறியரக வாகனமொன்று மோதியதில் விபத்துக்குள்ளாகியுள்ளனர்.

விபத்தில் காயமடைந்த இவர்கள் மூவரும் தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் அவர்களில் இருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ். வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

விபத்தை அடுத்து அவ்விடத்துக்குச் சென்ற சுன்னாகம் பொலிஸார், விசாரணைகளை மேற்கொண்டதுடன் குறித்த வாகனத்தையும் அதன் சாரதியையும் கைது செய்துள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .