2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

புனர்வாழ்வு பெற்றவர்களில் 650பேர் அங்கவீனர்கள்: இராணுவம்

Menaka Mookandi   / 2013 பெப்ரவரி 24 , மு.ப. 06:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

இராணுவத்தினரால் புனர்வாழ்வளிக்கப்பட்ட யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் போராளிகளில் சுமார் 650பேர் அங்கவீனர்களாக உள்ளனர் என்று புனர்வாழ்வு பொதுநல வேலைத்திட்ட யாழ். காரியாலய அதிகாரி மேஜர் ஜகத் குமார தெரிவித்தார்.

'2009ஆம் ஆண்டு காலப்பகுதியில் இராணுவத்தினரிடம் சரணடைந்த முன்னாள் போராளிகளில் யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் மூவாயிரம் பேர் புனர்வாழ்வு பெற்று சமூகத்துடன் இணைக்கப்பட்டுள்ளனர்.

சமூகத்துடன் இணைக்கப்பட்டவர்களில் 650 பேர் கண், கை மற்றும் ஒவ்வொரு அவயங்களை இழந்தவர்களாவர். இவர்கள் யாழ். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் வசித்து வருகின்றனர்' என்று அவர் குறிப்பிட்டார்.

'அவயங்களை இழந்தவர்களில் 450 பேரின் விபரங்கள் புனர்வாழ்வு பொது வேலைத்திட்ட உத்தியோகஸ்தர்களினால் திரட்டப்பட்டுள்ளன. அவர்களுக்கு விஷேட வேலைத்திட்டங்களை வழங்குவதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன' எனவும் அவர் மேலும் கூறினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X