2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

தங்கம்மா அப்பாக்குட்டியின் 86ஆவது பிறந்த நாள் அறக்கொடை விழா நாளை யாழ்ப்பாணத்தில்

Super User   / 2011 ஜனவரி 06 , பி.ப. 03:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கிரிசன்)

கலாநிதி அன்னை சிவத்தழிழ் செல்வி அமரர் ஆத்மீகத்தலைவர் தங்கம்மா அப்பாக்குட்டியின் 86ஆவது பிறந்த நாள் அறக்கொடை விழா எதிர்வரும் வெள்ளிக்கிழமை 07ஆம்  திகதி காலை 9 மணிக்கு தெல்லிப்பளை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான அன்னபு ஸ்ரீரணி மண்டபத்தில் தேவஜ்தானத் தலைவர் ஆறுதிருமுருகன் தலைமையில் நடைபெறவுள்ளது.

அன்னை சிவத்தமிழ் செல்வி நினைவாலய வழிபாடு திரு உருவச்சிலை வழிபாடுகளைத் தொடர்ந்து நிகழ்வுகள் ஆரம்பமாகவுள்ளன.

திருமறை ஓதலைத் தொடர்ந்து வரவேற்புரையை சு.ஏழுர் நாயகமும் ஆசியுரைகளை  ஸ்ரீதுர்க்காதேவி தேவஸ்தான பிரதம குரு சிவஸ்ரீ வா.அகிலேஸ்வரக்குருக்கள் நல்லை திருஞான சம்பந்த ஆதீனமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிய ஞானசம்பந்த பரமாச்சரிய சுவாமிகளும் அருளுரையை அமெரிக்வைச்சேர்ந்த ஆன்மீக சுடர் ரிஷ்தொன்டுநாதன் சுவாமிகளும் வழங்கவுள்ளார்கள்.

புpரதம விருந்தினாகளாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வைத்திய காஸ்ரீலாநிதி இ.கணேசமூர்த்தி வைத்திய கலாநிதி திருமதி ஜெயதேவி கணேசமூர்த்தி யும் சிறப்பு வருந்தினாகளாக  முல்லைத்திவு மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகனும் கௌரவ விருந்தினராக முல்லைத்திவு கல்வி வலய கல்விப் பணிப்பாளர் சு.கிருஸ்ணகுமார் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வைத்திய நிபுணர் த.பேரானந்தராஜா யாழி;ப்பாணம் பல் கலைக்கழக பேராசிரியர் கி.விசாகரூபனும் கலந்து கொள்ளவுள்ளார்கள்.

இதனையொட்டி வருடாந்தம் வழங்கப்படும் சிவத்தழிழ்  விருது ஜவருக்கு வழங்கப்படவுள்ளது.

கௌரவ விருது பெறும் சான்றோர்கள் வரிசையில் கிழக்கு மாகாணம் அக்கரைப்பற்றைச் சேர்ந்த விபுலானந்தா சிறுவா இல்ல ஸ்தாபகர் இறைபணிச் செம்மல் உயர் திரு த.கயிலாயபிள்ளை: இளைப்பாறி ஆசிரியர் இணுவில் முதுபெரும் புலவர் சி.க.சிற்றம்பலம் இளைப்பாறி சுங்கத் தினைக்கள் அத்தியட்சகர் காரைநகர் பரோபகாரி அமரார் கே.கே.சுப்பிரமணியம் இளைப்பாறி விரிவுரையாளர் கட்டுவன் இசைமணி இசை வித்தகர் திருமதி தர்மபூபதி சிதம்பரநாதன் இளைப்பாறி ஆசிரியர் சுழிபுரம் பண்டிதை பொன் பாக்கியம் இவாகள் கௌரவிக்கப்படவுள்ளார்கள்.

இதனைத் தொடர்ந்து சிவத் திமிழ் செல்வி அறக்கொடை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை 01ம் 10 ம் விடுதிகளில் உளள் நோயாளாகளுக்கு உணவு அருந்தும் பகுதிக்கான நிதியை வைத்தியகலாநிதி த.பேரானந்தராசாவும் முல்லைத்திவு கல்வி வலயப் பாடசாலைகளில் கல்வி கற்க்கும் க.பொ.த.சாதாரண தரம் 2011 மாணவாகளுக்கான நிதியை முல்லைத்தீவு கல்வி வலயப் பணிப்பாளர் சு.கிருஸ்ணகுமாரும் பெறவுள்ளார்கள்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X