A.P.Mathan / 2010 டிசெம்பர் 28 , பி.ப. 06:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஹேமந்த்)
டான் (தமிழ் ஒளி) தொலைக்காட்சியின் 10ஆம் ஆண்டு நிறைவையொட்டி எதிர்வரும் 31ஆம் திகதி யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் 'தமிழர் பிரச்சினையும் ஊடகங்களும்' என்ற தொனிப்பொருளி்ல் கருத்தரங்கம் நடைபெறவுள்ளது. அத்துடன் 10ஆவது ஆண்டு நிறைவு விழா நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளன.
'தமிழர்களின் எதிர்காலமும் ஊடகங்களும்' என்ற தலைப்பில் பேராசிரியர் ரட்ணஜீவன் கூலும்இ 'தமிழ் ஊடகங்களும் தமிழர் அரசியலும்' என்ற தலைப்பில் ரங்கனும் உரையாற்றவுள்ளனர். இதைத் தொடர்ந்து விரிவான கலந்துரையாடலும் இடம்பெறவுள்ளது.
மாலை நிகழ்ச்சிகளில் இராமநாதன் நுண்கலைக் கல்லூரியின் தலைவர் நவரட்ணம் தலைமையில் கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. இந்த நிகழ்ச்சிகளில் யாழ். குடாநாட்டின் முக்கிய கலைஞர்களும் டான் - தமிழ் ஒளி தொலைக்காட்சியின் கலைஞர்களும் பங்கேற்கின்றனர்.
இறுதி நிகழ்ச்சியாக புகழ்பெற்ற பாடகர்களும் இசைக்கலைஞர்களும் பங்கேற்கும் இசைக்கச்சேரி நடைபெறவுள்ளது என டான் தொலைக்காட்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. பிரான்ஸினை தளமாகக்கொண்டு ஆரம்பிக்கப்பட்ட இத்தொலைக்காட்சி தனது 10ஆவது ஆண்டு நிறைவை யாழ். மண்ணில் கொண்டாடுகின்றமை குறிப்பிடத்தக்கது.
3 hours ago
9 hours ago
22 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
9 hours ago
22 Dec 2025