2025 ஜூன் 23, திங்கட்கிழமை

ஜீ.ஜீ.பொன்னம்பலத்தின் 112ஆவது ஜனன தினம் அனுஷ்டிப்பு

Kogilavani   / 2013 நவம்பர் 08 , மு.ப. 09:42 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.கே.பிரசாத், சுமித்தி தங்கராசா


அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் தலைவரும்  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீ.ஜீ.பொன்னம்பலத்தின் 112 ஆவது ஜனன தினம் இன்று வெள்ளிக்கிழமை தமிழ் தேசியக் கூட்டமைப்பினரின் ஏற்பாட்டில் யாழில் அனுஷ்டிக்கப்பட்;டது.

இதன்போது, யாழ்.குருநகர் பகுதியில் அமைந்துள்ள ஜி.ஜி.பொன்னம்பலத்தின் உருவச்சிலைக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சொலமன் மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி, வடமாகாண சபை உறுப்பினர்களான விந்தன் கனகரத்தினம், அரியகுட்டி பரஞ்சோதி மற்றும் இம்மானுவல் ஆனல்ட் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

கூட்டமைப்பின் அஞ்சலி நிகழ்வுகள் முடிவுற்றதும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் அன்னாரின் சிலைக்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தியதுடன், தங்கள் கட்சி அலுவலகத்தில் நினைவுரைக் கூட்டங்களையும் நிகழ்த்தினர்.

இந்நிகழ்வில் பத்மினி சிதம்பரநாதன் உள்ளிட்ட கட்சி அங்கத்தவர்கள் பலர் கலந்துகொண்டனர்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .