Menaka Mookandi / 2011 டிசெம்பர் 27 , மு.ப. 09:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
நத்தார் பண்டிகையை கொண்டாடுவதற்காக வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் சென்ற இளைஞர் குழுவினர், யாழ். திருநெல்வேலி பகுதியில் இன்று செவ்வாய்கிழமை அதிகாலை கடைகளை உடைத்து கொள்ளையில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டில் 12பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்.பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள குறித்த இளைஞர்களிடம் தொடர்ந்தும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர்களால் கொள்ளையிடப்பட்டதாகக் கூறப்படும் பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இவர்கள் வந்த வாகனமும் யாழ். பொலிஸாரினால் தடுத்துவைக்கப்பட்டுள்ளதுடன் அவர்களை நாளை யாழ். நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக யாழ். பொலிஸ் நிலைய தலைமைப் பொறுப்பதிகாரி சமன் சிகேரா தெரிவித்தார்.
58 minute ago
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
58 minute ago
1 hours ago
3 hours ago