Menaka Mookandi / 2011 டிசெம்பர் 19 , பி.ப. 02:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
இந்தியாவிலிருந்து இலங்கையின் நெடுந்தீவு கடற்பரப்பிற்கு போதைப்பொருள் கடத்தியதான குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட இலங்கை, இந்திய மீனவர்கள் 8 பேரையும் எதிர்வரும் ஜனவரி மாதம் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் எஸ்.கஜநிதிபால இன்று திங்கட்கிழமை உத்தரவிட்டுள்ளார்.
இந்த மீனவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டதாக கூறப்படும் ஹெரோயின் போதைப்பொருள் தொடர்பில் கொழும்பு இராசாயன பகுப்பாய்வு திணைக்களத்தின் அறிக்கை இன்னமும் தயாரிக்கப்படவில்லை என பொலிஸார், நீதிமன்றத்தில் தெரிவித்ததை அடுத்தே அவர்களை விளக்கமறியலில் வைக்க மல்லாகம் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டவர்களில் இலங்கை மீனவர்கள் மூவரும் இந்திய மீனவர்கள் ஐவரும் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
17 Dec 2025
17 Dec 2025
17 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 Dec 2025
17 Dec 2025
17 Dec 2025