2025 ஜூலை 02, புதன்கிழமை

யாழில் 1,500 ஹெக்டேயரில் வெங்காயச் செய்கை

Suganthini Ratnam   / 2014 ஜூன் 30 , மு.ப. 07:48 - 0     - {{hitsCtrl.values.hits}}


- செல்வநாயகம் கபிலன்


யாழ். மாவட்டத்தில் இம்முறை 1,500 ஹெக்டேயரில் கோடைகால வெங்காயச்  செய்கை மேற்கொள்வதற்கு எதிர்பார்த்துள்ளதாக    வடமாகாண பிரதி விவசாயப் பணிப்பாளர் கிருஸ்ணன் ஸ்ரீபாலசுந்தரம் இன்று திங்கட்கிழமை (30) தெரிவித்தார்.

பருவமழை மற்றும் கிணறு, குளங்களை நம்பி ஜுலை மாதம் இச்செய்கையை மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளதாகவும்  அவர் கூறினார்.

யாழ்ப்பாணத்தில் வழமையாக  1,400 ஹெக்டேயரில் வெங்காயச் செய்கை  மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இருப்பினும்,  தற்போது வெங்காயத்தின் தேவை அதிகரித்துள்ளதால்  1,500 ஹெக்டேயரில்; செய்கை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் கூறினார்.

சிறுப்பிட்டி, உடுவில், கோப்பாய், தெல்லிப்பழை, அச்சுவேலி, புத்தூர், தீவகம் உள்ளிட்ட பல இடங்களில் பெருமளவில் வெங்காயச் செய்கை  மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

யாழ்ப்பாணத்தில் தற்போதைய சந்தை நிலைவரப் படி வெங்காயம் 130 ரூபா தொடக்கம் 150 வரையில் விற்பனை செய்யப்படுகின்றது. இதற்கான காரணம் சந்தையில் வெங்காயத்திற்கு அதிக கேள்வி காணப்படுகின்றமையே ஆகும்.

இந்தக் கேள்வி  எதிர்வரும் மாதங்களில் இன்னமும் அதிகரிக்கலாம் என்பதால்,  கோடைகால வெங்காயச் செய்கையில் அதிகரிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .