2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

இந்திய மீனவர்கள் 18 பேர் யாழில் கைது

Suganthini Ratnam   / 2014 ஜூலை 22 , மு.ப. 04:34 - 0     - {{hitsCtrl.values.hits}}


-செல்வநாயகம் கபிலன்


யாழ். எழுவைதீவுக் கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும்  இந்திய மீனவர்கள் 18 பேர் இன்று செவ்வாய்க்கிழமை (22) அதிகாலை கைதுசெய்யப்பட்டதாக யாழ். கடற்றொழில் நீரியல்வளத்துறையின் பிரதிப் பணிப்பாளர் நடராசா கணேசமூர்த்தி தெரிவித்தார்.

தமிழ்நாட்டின் கோட்டைப்பட்டிணம், ஜெகதாப்பட்டிணம் ஆகிய பகுதிகளிலிருந்து 05 படகுகளில் வந்த நிலையில் மேற்படி 18 மீனவர்களை கைதுசெய்த கடற்படையினர், தம்மிடம் ஒப்படைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

மேற்படி மீனவர்களை ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் இன்றையதினம் (22) ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .