2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

யாழ். மாவட்ட அபிவிருத்திக்கு 18698 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

Super User   / 2010 டிசெம்பர் 20 , பி.ப. 03:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

(கவிசுகி)

யாழ். மாவட்டத்தில் அடுத்த நிதியாண்டில் 1648 அபிவிருத்தித் திட்டங்களுக்கு 18 698 மில்லியன் ரூபா ஒதுக்கப்படவிருப்பதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் அறிவித்துள்ளார்.

இதற்கான முன்மொழிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாகவும் நிதி ஒதுக்கீடுகள் கிடைக்கப் பெற்றதும் வேலைகள் ஆரம்பமாகுமெனவும் கூறியுள்ளார்.

யாழ்ப்பாணக் குடாநாட்டில் இன்றும் 18004 குடும்பங்களைச் சேர்ந்த 66605 பேர் நலன்புரி நிலையங்களிலும் நிலையங்களிலும் உறவினர் நண்பர்கள் வீடுகளிலும் வாழ்ந்து வருகின்றனர்.

இவர்கள் அனைவரும் வலிகாமம் வடக்கு பிரதேசங்களை சேர்ந்தவர்கள். இவர்கள் வாழ்ந்த பகுதிகளில் கண்ணி வெடிகள் இன்னும் அகற்றப்படாமையால் இவர்களை மீள்குடியமர்த்துவதில் தாமதம் நிலவுவதாக தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X