2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

திருநெல்வேலியில் இளைஞர்கள் மீது வாள்வெட்டு; இருவர் காயம்; 2பேர் கைது

Menaka Mookandi   / 2012 பெப்ரவரி 08 , மு.ப. 09:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். திருநெல்வேலி சந்தைப்பகுதியில் இன்று காலை இளைஞர்கள் மீது வாளினால் வெட்டிக் காயப்படுத்திய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டர் சைக்கிளில் வந்த இருவர் சமாரியாக சந்தைப்பகுதியில் நின்ற இரு இளைஞர்களை துரத்தித் துரத்தி வாளால் வெட்டியுள்ளனர். வாள் வெட்டுக் காயங்களுக்கு இலக்கான அவ்விரு இளைஞர்களும் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

வாளால் இளைஞர்களை வெட்டிக் காயப்படுத்திய இரு இளைஞர்கள் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவதாக கோப்பாய் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X